டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளரை உதவிப் பயிற்சியாளராக்கியது IPL லக்னோ அணி..!

டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளரை உதவிப் பயிற்சியாளராக்கியது IPL லக்னோ அணி..!

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக களம் காணும் லக்னோ அணிக்கு உதவிப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தாஹியா நியமிக்கப்பட்டுள்ளார்.

லக்னோ அணிக்குப் தலைமைப் பயிற்சியாளராக சிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆன்டி ஃப்ளவர் செயல்படுவார் எனவும் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அணி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழாமில் செயல்பட்ட விஜய் தாஹியா இப்போது உதவிப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

டெல்லி அணியில் ரிக்கி பொண்டிங் தலைமையில் பயிற்றுவிப்பு குழுவில் தாஹியா செயற்பட்டிருந்தார்.

2022ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் டி20 தொடரில் லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி குழுமத்தின் தலைவர் ராஜிவ் கோயங்கா வாங்கியுள்ளார்.
லக்னோ அணியை ரூ.7ஆயிரம் கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது ஆர்பிஎஸ்ஜி குழுமம் என்பதும் குறிப்பிடத்தக்கது.