டெஸ்டில் அண்டர்சனுக்கு செய்ததை ஆச்சருக்கும் செய்து காட்டிய பான்ட் (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய பேசு பொருளாக இருக்கும் பான்ட், டெஸ்ட் போட்டிகளில் ரிவேர்ஸ் சுவீப் முறை மூலமாக அன்டர்சனுடைய பந்தை எதிர்கொண்டமை எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

அன்டர்சன் போன்ற அபார  வேகப்பந்துவீச்சாளர்  ஒருவரது பந்துவீச்சை ரிவேர்ஸ் சுவீப் முறை மூலமாக துடுப்பெடுத்தாடியமை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருந்தது.

அதே போன்று இன்று ஆட்சர் வீசிய பந்து வீச்சையும் பான்ட் Reverse Sweep மூலமாக சிக்சருக்கு பறக்க விட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

போட்டியில் இந்திய அணி இன்று 8 விக்கெட்டுகளால் தோல்வியைத் தழுவியது, 2 வது போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.