டெஸ்ட்டில் டேவிட் வோனரின் அடுத்த இலக்கு என்ன தெரியுமா ?

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் – டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர். இவர் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்ல மிகமுக்கிய காரணமாகவும் அமைந்தார்.

மேலும் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் ஓய்வு பெறுவதற்கு முன்பு இரு ஆசைகள் உள்ளதாகத் தற்போது வார்னர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய வார்னர், “நாங்கள் இன்னும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்கவில்லை. அந்தச் சாதனையை நிகழ்த்தினால் நன்றாக இருக்கும். 2019இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் சமன் ஆனது. 2023இல் அங்கு விளையாடி ஆஷஸ் தொடரையும் வெல்லவேண்டும்.

வயதான வீரர்களுக்கு முக்கிய உதாரணமாக உள்ளார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். அவரைப் பார்த்து ஊக்கம் கொள்கிறோம். அடுத்ததாக பாகிஸ்தான், இலங்கைக்குச் சென்று டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறோம். அதுதான் எங்கள் அணி மற்றும் இதன் குணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். இத்தொடர்களில் விளையாடி வெற்றி பெற ஆவலாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர், 3 அரை சதங்களுடன் 388 ரன்கள் எடுத்துள்ளார்.

#Abdh