டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்ட அவுஸ்ரேலியாவின் அதிரடி நட்சத்திரம்..!
புதன்கிழமை காலியில் நடக்கும் டெஸ்ட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஆஷ்டன் அகர் ஆகியோர் வெளியேறுவது சந்தேகத்தில் இருப்பதால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மேக்ஸ்வெல் டெஸ்ட் அணிக்கு திரும்ப தயாராக உள்ளார்.
ட்ரெவெஸ் ஹெட் இந்த வார தொடக்கத்தில் ODI தொடரில் தொடை தசையில் காயம் அடைந்தார், அதே சமயம் சுழல்பந்து வீச்சாளர் அஷ்டன் அகர் உபாதையால் அவதிப்படுகின்றார்.
இதன்காரணத்தால் அதிரடி நட்சத்திரம் மக்ஸ்வெல் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் குழாமுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.