டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை அதிக முறை வீழ்த்தியோர் பட்டியல்..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை அதிக முறை வீழ்த்தியவர் என்ற சாதனையை இன்று அன்டேர்சன் சமன் செய்துள்ளார்.

 இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை அதிக முறை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் வைத்திருந்தார்.

இந்திய அணி கேப்டன் விராத் கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை நதன் லயன் 7 முறை வீழ்த்தியுள்ளார்.

அவரை தொடர்ந்து தற்போது அண்டர்சனும் இன்றைய போட்டியில் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதோடு ஏழாவது முறையாக கோலியை ஆட்டமிழக்கச் செய்து அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

அதற்கு அடுத்த இடத்தில் ஐந்து முறை கோலியை ஆட்டமிழக்க செய்த வீர்ர்களாக ஸ்டூவர்ட் பிரோட், மொயீன் அலி, பேட் கம்மின்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

அனைத்துவகையான போட்டிகளிலும் அன்டேர்சன் , சவுத்தி ஆகியோர் தலா 10 முறை கோலியின் விக்கட்டை கைப்பற்றியுள்ளனர்.

???