இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா எந்த எந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும் எனும் கருத்தை முன்வைத்திருக்கிறார் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சு வீரரான அஜித் அகர்கார்.
அவரது கருத்தின்படி இந்தியா அனுபவத்தின் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இஷாந்த் சர்மாவா, சிராஐ் இருவரில் யாரை சேர்ப்பது எனும் கேள்வி நிலவி வரும் நிலையில், 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கும் இஷாந்த் சர்மா நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் எனும் கருத்து அவரிடமிருந்து வந்துள்ளது.
ஜஸ்பிரித் பூம்ரா, சாமி ,இஷாந்த் சர்மா இந்த மூன்று பந்து வீச்சாளர்களும் இந்தியாவின் முதல் தெரிவு பந்துவீச்சு கூட்டணியாக அமையவேண்டும். நான்காவது வேகப் பந்துவீச்சாளர் இடம் பிடிப்பாராக இருந்தால் அங்கே சிராஜ் கவனத்தில் கொள்ளபடலாம் எனும் கருத்தை அகார்கர் தெரிவித்திருக்கிறார்.