ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை சவுத்தாம்ப்டனில் உள்ள ஏகாஸ் கிண்ணத்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா விளையாடவுள்ளது.
இந்தப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான பார்த்திவ் படேல் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் அதிக ஓட்டங்கள், மற்றும் விக்கெட் எடுப்பவர் குறித்து கணித்துள்ளனர்.
முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பார்த்திவ் கருத்துப்படி, புஜாரா அதிக ஓட்டங்கள் பெற்றுக்கொள்வார் என்றும், மூன்று முதல் நான்கு மணி நேரம் பேட் செய்தால் இந்தியாவை மிகச் சிறந்த நிலையில் வைத்திருப்பார் என்றும் பட்டேல் கருத்து வெளியிட்டார்.
முகமது ஷமியை அதிக விக்கெட் வீழ்த்தும் வீரராக அவர் தேர்வு செய்தார். ஜாஸ்பர்ட் பும்ராவும், இஷாந்த் சர்மாவும் சிறப்பாக செயல்பட்டாலும் ஷமி இந்தியாவுக்கான வெற்றிக்கதவை திறக்க உதவுவார் என்று கருத்து தெரிவித்தார்.
இருப்பினும், முன்னாள் இந்திய சகலதுறை வீரர், இர்பான் பதான் அதே கருத்தை தெரிவிக்கவில்லை , ட்ரெண்ட் போல்ட் மற்றும் ஷமி ஆகியோரை அதிக எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை கைப்பற்றுவார்கள் என்றும் , அதிக ஓட்டங்கள் பெறும் வீரராக இர்ஃபான் பதன், நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனை குறிப்பிட்டார்.
நியூசிலாந்திற்கு 55-45 என்று சாதகதனமை இருக்கும் என்று நினைக்கிறேன் என்றும் பதான் தெரிவித்தார்.