எதிர்வருகின்ற 18ஆம் திகதி இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இடம்பெற இருக்கிறது.
இது தொடர்பில் ரசிகர்கள் பலரும் பலவிதமான எண்ணப்பாடுகளுடன் அலை மோதிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஷ் ராஜா ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோகித் சர்மாவிடம் இருந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நீங்கள் இரட்டை சதத்தை எதிர்பார்க்கலாம் என்ற கருத்து அவரிடம் இருந்து வந்துள்ளது.
ஐஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் ரோகித் 1030 ஓட்டங்களை விளாசியுள்ளார், ரோகித் சர்மா ஆடுகளத்தில் சிறிது நேரம் நின்று நிலைத்து, நிதானித்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்துவிடுவாராக இருந்தால் அவரை ஆட்டம் இழக்கச் செய்வது கடினமானது என்ற கருத்து ரமீஷ் ராஜாவிடம் இருந்து வந்துள்ளது.
இதே நேரத்தில் நீங்கள் ரோஹித் சர்மாவிடம் இருந்து நிச்சயம் இரட்டைச்சத்த்தை எதிர்பார்க்கலாம் என்னும் கருத்தையும் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.