டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை இந்தியா Whitewash செய்யும், முன்னாள் அவுஸ்திரேலிய ஆட்டக்காரரின் கணிப்பு ..!

டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை இந்தியா Whitewash செய்யும், முன்னாள் அவுஸ்திரேலிய ஆட்டக்காரரின் கணிப்பு ..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம் பெற்று வருகிறது.

முதலாவது போட்டி Draw வில் நிறைவுக்கு வந்தது, நாளை லோர்ட்ஸ்  மைதானத்தில் 2வது டெஸ்ட் ஆட்டம் ஆரம்பமாகும், இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரட் ஹொக் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

Brad Hogg

குறிப்பாக இந்தப் போட்டி இந்தியாவுக்கு மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுமாக இருந்தால் நிச்சயமாக இந்த தொடரில் இங்கிலாந்தை Whitewashசெய்வதற்கான வாய்ப்பு இந்தியாவிற்கு அதிகம் காணப்படுகிறது.

இங்கிலாந்து அணியை விடவும் பல மடங்கு பலமான அணியாக இந்தியா இருக்கிறது என்கிற கருத்தையும் Brad Hogg முன் வைத்துள்ளார்.