டெஸ்ட் போட்டிகளிலிருந்து புவனேஷ்வர் குமார் ஓய்வு பெருகிறாரா -குழம்பும் ரசிகர்கள்…!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புனவனேஷ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து தொடர் ஆகியவற்றுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இணைக்கப்படாத நிலையில் பலவிதமான கதைகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள புவனேஷ்வர் குமார், இப்படியான கட்டுக்கதைகளை தவிர்க்குமாறு ஊடகங்களையும், ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

 

 

 

 

அனைத்துவகையான போட்டிகளிலும் தொடர்ந்தும் இந்தியாவுக்காக ஆடுவதற்க்கே தான் எப்போதும் ஆவலாக இருப்பதாகவும், தயவு செய்து இவ்வாறான கட்டுக்கதைகளை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தின் மூலமாக புவனேஷ்வர் குமார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.