டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் பின் தள்ளப்பட்ட கோலி ,முன்னேறி வந்த பூம்ரா, புதிய தரவரிசை வெளியீடு ..!
சர்வதேச கிரிக்கெட் பேரவை அண்மையில் நிறைவுக்கு வந்த இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை தொடர்ந்து புதிய டெஸ்ட் தரவரிசை வெளியிட்டுள்ளது.
இதன்படி புதிய தர வரிசையில் விராட் கோலி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரநிலையில் 4வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.
தொடர்ந்தும் முதலிடத்தில் நியூஸிலாந்து அணி தலைவர் வில்லியம்சன் தொடர, இரண்டாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லவுச்சேன் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் இருக்கின்றனர்.
4வது இடத்துக்கு இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் முன்னேறிவர இந்திய அணி தலைவர் கோலி ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
ஆறாம் ,ஏழாம் இடங்களில் ரோகித் சர்மா மற்றும் பான்ட் ஆகியோர் தரவரிசை படுத்தப்பட்டுள்ளன்.
பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் 10வது இடத்தில் காணப்படுகிறார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பூம்ரா 10 இடங்கள் முன்னேறி மீண்டும் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளமை முக்கியமானது.
முழுமையான டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்ட தரவரிசை ????