டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை வெளியானது- இந்தியா முதலிடம், இங்கிலாந்து முன்னேற்றம்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசையை கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதிப்போட்டியில் மோதவிருக்கும் இந்திய, நியூசிலாந்து அணிகள் இந்த தரவரிசையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்திய அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 120 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் காணப்படுகின்ற அதேவேளை மூன்றாவது இடத்தில் இருந்த அவுஸ்ரேலியா நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட, இங்கிலாந்து மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் 2 இடங்கள் முன்னேறியமை குறிப்பிடத்தக்கது, இந்தத் தரவரிசையில் 8-வது இடத்தில் இலங்கை அணி ஒன்பதாவது இடத்தில் பங்களாதேஷ் அணி 10-ஆவது இடத்தில் ஜிம்பாப்வே அணிகள் காணப்படுகின்றன.