டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் சகலதுறை வீரர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.  385 புள்ளிகளுடன் ஜடேஜா முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்  ஜோசன் ஹோல்டர் 357 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அவுஸ்திரேலிய வீர் பட் கம்மின்ஸ் 1வது இடத்திலும் , ரவிச்சந்திர அஸ்வின் 2-வது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 4-வது இடத்திலும் உள்ளனர்.பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி 6 இடத்திற்கு முன்னேறினார்.
மேலும் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் மார்னஸ் முதல் இடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலிய வீரர் ஸ்டிவ் ஸ்மித் மூன்றாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.