டேனியல் சாம்ஸ் வீசிய பிரமிக்க வைத்த இறுதி ஓவர், மாலிங்கவிற்கு பின்னர் மும்பைக்கு சாதனை ஈட்டிக் கொடுத்த சாங்ஸ்…! ( வீடியோ இணைப்பு )

டேனியல் சாம்ஸ் வீசிய பிரமிக்க வைத்த இறுதி ஓவர், மாலிங்கவிற்கு பின்னர் மும்பைக்கு சாதனை ஈட்டிக் கொடுத்த சாங்ஸ்…! ( வீடியோ இணைப்பு )

15வது ஐபிஎல் போட்டி தொடரின் நேற்றைய 51 ஆவது போட்டியில் குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நிறைவுக்கு வந்தது.

9 ஓட்டங்கள் தேவையாக இருந்த போது இறுதி ஓவரில் 3 ஓட்டங்களை மட்டுமே டானியல் சாம்ஸ் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது .

ஏற்கனவே ஒரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 35 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விமர்சனத்தை சந்தித்திருந்த சாம்ஸ்,  நேற்றைய போட்டியில் ஒரு ஓவரில் 9 ஓட்டங்களை விட்டுக் கொடுக்காமல் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

9 ஓட்டங்களுக்கும் குறைவாக தேவையான நிலையில் ஒரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த பந்துவீச்சாளராக மாலிங்கவிற்கு பின்னர் சாதனை நாயகனாக மாறினார் சாம்ஸ்.

வாழ்க்கை விசித்திரமானது.

வீடியோவை பாருங்கள் ?