டேவிட் மில்லரின் அதிரடியில் அயர்லாந்துடனான டி20 தொடரை வென்று அசத்தியது தென்ஆப்பிரிக்கா..!
தென் ஆப்பிரிக்க மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் டேவிட் மில்லரின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலமாக தென் ஆப்பிரிக்கா அசத்தலாக வெற்றியை தனதாக்கி, தொடரை 2 க்கு 0 என்று பெற்றுக்கொண்டது.
முன்னதாக மேற்கிந்திய தீவுகளுடனான T20 தொடரை மிகச்சிறப்பாக வெற்றி கொண்ட தென் ஆப்பிரிக்கா, அடுத்து வந்த அயர்லாந்துடனான தொடரையும் வெற்றி பெற்று அசத்தியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, 54 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டாலும், டேவிட் மில்லர் மிகச்சிறப்பாக 44 பந்துகளில் 75* ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொடுத்தார் .
இறுதி ஓவரில் மட்டும் மொத்தம் 4 சிக்சர்களை டேவிட் மில்லர் விரட்டினார், இதனால் 159/7 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது தென் ஆபிரிக்க அணி.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து குறிப்பிடும்படியாக துடுப்பாட்டம் அமைந்திருக்கவில்லை, இதன் அடிப்படையில் 117 ஓட்டங்களுக்கு அயர்லாந்தின் சகல விக்கட்டுக்களையும் பறித்து 42 ஓட்டங்களால் வெற்றிபெற்று ஒரு போட்டி மீதமுள்ள நிலையிலேயே தொடர் தென் ஆபிரிக்கா வசமானது.
ஆட்டநாயகனாக டேவிட் மில்லர் தேர்வானார்.