டேவிட் வோர்னர் ஏன் நீக்கப்பட்டார்…? உதவிப் பயிற்சியாளர் தகவல்…!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன் ரைசேர்ஸ் அணியின் தலைவராக செயல்பட்ட டேவிட் வார்னரை அணித்தலைமையிலிருந்து நீக்குவதற்கான அணி நிர்வாகத்தின் முடிவு, விளையாட்டைத் தழுவியதாக அணியின் உதவி பயிற்சியாளர் பிராட் ஹாடின் வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் தலைவரான வோர்னர், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும் பதினொருவரில்கூட இல்லை. இந்த அறிவிப்பு ஒரு “அதிர்ச்சி” என்று ஹாடின் ஒப்புக் கொண்டார், ஆனால் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரராணா வோர்னர் அங்கே சிறப்பாக முடிவெடுத்ததற்காக ஹாடின் பாராட்டினார்.

 

 

 

 

 

 

 

 

 

இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு சிறிய அதிர்ச்சியாக இருந்தது. அணிக்குள் எதையாவது தூண்ட முயற்சிக்க நிர்வாகம் வேறு திசையில் செல்ல முடிவு செய்தது. எங்களுக்குத் தேவையான தரத்திற்கு நாங்கள் விளையாடவில்லை என்பதே அங்கிருந்த முக்கிய பிரச்சனையாகும்.

பெஞ்சில் இருந்துகொண்டு அவர் நடந்துகொண்ட விதத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள் . அவர் எல்லோரையும் சுற்றி இருந்தார், பானங்களை காவிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார். அணியின் கூட்டங்களில் அவர் இன்னும் குரல் கொடுத்தார். அவர் ஒரு கடினமான சூழ்நிலையை சிறப்பாகவே கையாண்டார் என்று ஹாட்டின் கூறினார்.

 

 

SRH அணியின் தலைமைத்துவத்திலிருந்து நீக்கப்பட்டு அந்த இடத்துக்கு நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார், ஆயினும் ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் மீண்டும் சன் ரைசேர்ஸ் அணி தோல்வியுற்றிருந்தது.

பின்னர் கொரோனா அச்ச நிலைமை காரணமாக IPL போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.