டொன் பிரட்மன், விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோருக்கு அடுத்து ரோகித் சர்மா- என்ன பட்டியல் தைரியுமா ?

டொன் பிரட்மன், விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோருக்கு அடுத்து ரோகித் சர்மா- என்ன பட்டியல் தைரியுமா ?

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணினக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம் பெற்று வருகிறது.

ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் வெளிநாட்டு மண்ணில்  ரோகித் சர்மா தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்த சதத்தின் மூலமாக ரோகித் சர்மா இங்கிலாந்து மண்ணில் மொத்தமாக ஒன்பது சதங்களை பூர்த்தி செய்த வீரராக தன்னை அடையாளப்படுத்தினார்.

இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்களை பதிவு செய்த வீரராக கிரிக்கெட்டின் பிதாமகன் பிரட்மன் காணப்படுகிறார், பிரட்மன் இங்கிலாந்து மண்ணில் 11 சதங்களை பூர்த்தி செய்திருக்கும் அதே நேரத்தில், மேற்கிந்திய தீவுகளின் விவ்வியன் ரிச்சர்ட்ஸ் 9 சதங்களை இங்கிலாந்தில் பெற்றுள்ளார்.

இவர்களுக்கு அடுத்து இந்திய வீரர் ரோகித் சர்மா அனைத்து வகை போட்டிகளிலும் இங்கிலாந்து மண்ணில் வைத்து 9 சதங்களை பூர்த்தி செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.