டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான புதிய கட்டுப்பாடு…!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளிநாட்டு பார்வையாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று ஜப்பானிய ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானிய அரசாங்கம், டோக்கியோ 2020 ஏற்பாட்டுக் குழு ஆகியவை இந்த பாரிய நிகழ்வை உள்நாட்டு பார்வையாளர்களுக்கு முன்னால் மட்டுமே நடத்த முனைகின்றன என்று ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் வருகை ஜப்பானிய மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து பார்வையாளர்களை பெரிய அளவில் அனுமதிப்பது மக்களை கவலையடையச் செய்யும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் கருத்து வெளியாகியுள்ளது.