எதிர் வருகின்ற ஜூலை மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் ஜப்பானியர்கள் இப்போது தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 வாரங்கள் இருக்கும் நிலையில் ஜப்பானில் கொரோனாவினுடைய தாக்கம் அதிகரித்து இருக்கிறது, ஜப்பானியர் சனத்தொகையில் இரண்டு விதமானவர்களுக்கு மட்டுமே இப்போது தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஜப்பானியர்கள் 350,000 பேர் இணைந்து இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கையெழுத்திடும் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள்.
அவர்களுடைய கருத்துப்படி ஜப்பானில் கொரோனாவினுடைய தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டவர்களின் வருகையுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் இன்னும் கொரோனாவினுடைய தாக்குப்பிடிக்குள் ஜப்பான் நசுக்கப்படும் எனும் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
கடந்தாண்டு மார்ச் மாதம் இடம்பெறவிருந்து இந்தாண்டுக்கு ஒத்திவைத்து எதிர்வரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் இதுவரை எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.