டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் கரோலினா மாரின்- இந்தியாவின் சிந்துவுக்கு வாய்பாகுமா..?

கடந்தாண்டு இடம்பெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜப்பானில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறையும் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது.

கொரோனா அச்ச நிலைமையையும் கடந்து முன்னணி வீரர்கள் பலரும் போட்டிகளிலிருந்து விலகி வருகின்றமையும் முக்கிய சிக்கலாகும்.

இந்த நிலையில், கடந்தமுறை இடம்பெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டன் போட்டிகளில் தங்கம் வென்ற ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீராங்கனையான கரோலினா மாரின் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக தன்னால் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளார். இதன் காரணத்தால் இந்திய வீராங்கனை PV சிந்து கடந்தமுறை தவறவிட்ட ஒலிம்பிக் தங்கத்தை இம்முறை கைப்பற்றும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.