டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் – இலங்கை சாதிக்குமா ?

எதிர்வரும் 23 ம் திகதி 2020 ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் பிற்போடபட்டு இந்தாண்டு 2021 இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆரம்பிக்க உள்ளது.

இலங்கை சார்பாக இம்முறையும் ஒன்பது வீர வீராங்கனைகள் பங்குகொள்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்ம நாடு பெரிதும் விளையாட்டின் மூலமே தன்னை பெரிதும் உலகறிய வைத்தது அதில் cricket ஐ போலவே ஒலிம்பிக் போட்டிகளும் முக்கியம் பெறுகிறது அதிலும் மெய்வல்லுனர் போட்டிகள்.

1928 இல் ஆரம்பமானது இலங்கை மெய்வல்லுனர்கள் ஒலிம்பிக் இல் பங்கு பெற்ற தொடங்கியது. அதன் பின்னர் 1948 இல் பங்குகொண்டார்கள், முதன் முதலில் Duncan White 400m தடை தாண்டலில் 1948 இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அதன் பின்னர் 1952, 1956, 1960, 1964, 1968, 1972, 1980, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012 and 2016 என நம் நாட்டு வீரர்கள் பங்கு பற்றி இருந்தது குறிப்பிட தக்கது.

1976, 1984 இல் யாரும் பங்குகொள்ளவில்லை. 1948 இன் பின்னர் இலங்கைக்கு சுஷந்திக அவர்களால் மீண்டும் ஒரு வெள்ளி பதக்கம் 2000 ஆண்டு சிட்னி இல் 200m ஓட்ட போட்டியில்  கிடைத்தது.

தமயந்தி தர்ஷா, சிரியானி குலவன்ஷ, சுஹத் திலகரட்ன, ரோஹன் பிரதீப்குமார போன்ற பல சர்வதேச புகழ் பெற்ற வீரர்கள் பங்கு பற்றி இருந்தார்கள்.

இம்முறை 2020 இல் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி இருவர் யுபுன் அபேக்கூன் 100m, நிமாலி லியனாராச்சி 800m போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர்.

மீண்டும் ஒருமுறை இலங்கை கொடியுடன் தேசிய கீதமும் டோக்கியோ மைதானத்தில் கண்களால் பார்த்தும் காதுகளில் கேட்கட்டும்…
#Tokyo2020 #olympics2021 #sri_lanka_olympic #srilanaka_athletic

#சந்துரு வரதராசன்