டோனியின் ஓய்வு குறித்து பரபரப்பு தகவல் -சென்னை நிர்வாகி தகவல் …!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்ச்சியாக சென்னை அணியின் தலைவராக தொடர்ந்து செயல்படும் டோனி, இந்த ஆண்டு IPL போட்டிகள் நிறைவுக்கு வந்த பின்னரும் சென்னை அணியின் தலைவராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் சென்னை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.