டோனியின் சரித்திரத்திலேயே முடியாததை சர்வசாதாரணமாக செய்துகாட்டிய பான்ட்…!

இந்திய கிரிக்கெட் அணியின் அண்மைய பேசுபொருளாக திகழும் அதிரடி விக்கெட் காப்பாளர் ரிஷாப் பான்ட் ஒரு புதிய சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகவும், விக்கெட் காப்பாளராகவும் திகழ்ந்த டோனி, இந்திய அணிக்காக டெஸ்ட்டில் 90 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டோனிக்கு பின்னர் விக்கெட் காப்பாளராக அணியில் இணைக்கப்பட்டுள்ள ரிஷாப் பான்ட், இதுவரை வெறுமனே 20  டெஸ்ட்டிலேயே விளையாடியுள்ளார்.

ஆயினும் டோனி தன் கிரிக்கெட் சரித்திரத்திலேயே செய்ய முடியாத உச்சபட்ச சாதனையை, பான்ட் வெறுமனே 23  வயதிலேயே சாதித்துள்ளதாக கொண்டாடப்படுகின்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

ஆம், புதிதாக வெளியாகியுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் தரநிலையில் பான்ட் 6 வது இடத்தை தனதாக்கி, இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் தரநிலையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே இந்திய விக்கெட் காப்பாளர் எனும் சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 36 வது விக்கெட் காப்பாளராக பான்ட் திகழ்கின்றார், இதுவரை டோனி உள்ளிட்ட 35 விக்கெட் காப்பாளர்களால் படைக்க முடியாத உயரிய சாதனையை பான்ட் 23 வயதிலேயே எட்டியுள்ளார். இதுவரையில் எந்தவொரு இந்திய விக்கெட் காப்பாளரும் தரநிலையில் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை.

 

இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பான்ட், 3 சதம், 6 அரைச்சதம் அடங்கலாக 45.26 எனும் சராசரியில் 1358 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் இப்போது ரசிகர்கள் பான்டை கொண்டாடிவருகின்றமை முக்கியமானது.

அறிவிக்கப்பட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசை விபரம் இணைக்கப்பட்டுள்ளது.