டோனியின் சாதனையை சமன் செய்த ஆப்கான் அணித்தலைவர்…!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் உலக சாதனை ஒன்றை ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ஆஸ்கர் ஆப்கான் சமன் செய்துள்ளார்.

இன்று இடம்பெற்ற சிம்பாவே அணியுடனான 2 வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என்று கைப்பற்றியது.

இன்றைய வெற்றிமூலம் ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ஆஸ்கர் ஆப்கான் 41 வது T20 வெற்றியைப் பெற்றுக்கொண்டார்.
இதுவரை அதிக T20 வெற்றிகளைப் பெற்றவராக டோனியே திகழ்ந்தார். இந்தநிலையில் டோனியின் சாதனையை இன்று ஆப்கான் அணித்தலைவர் சமன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிக T20 வெற்றிகள்.

அஸ்கார் ஆப்கான் – 41*
MS டோனி – 41
ஓயின் மோர்கன் – 33
சர்பரஸ் அஹமத் – 29
டேரன் சாமி- 27
விராட் கோஹ்லி / வில்லியம் போர்டர்பியில்ட் – 26