டோனி, கோஹ்லியின் சாதனையை ஒரே போட்டியில் தகர்த்த ப்ரித்வி ஷா…!

டோனி, கோஹ்லியின் சாதனையை ஒரே போட்டியில் தகர்த்த ப்ரித்வி ஷா…!

இந்திய கிரிக்கெட் அணிக்கு இளையோர் உலக கிண்ணம் வென்று கொடுத்தவரும், இந்திய டெஸ்ட் ஆரம்ப வீரராகவும் விளையாடும் ப்ரித்வி ஷா ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியாவின் உள்ளூரில் இடம்பெற்றுவரும் விஜய் ஹசாரே மட்டுப்படுத்தப்பட்ட போட்டி தொடரின் இன்றைய போட்டியில் ப்ரித்வி ஷா ஒரு இந்திய சாதனைக்கு சொந்தக்காரராகினார்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியை நோக்கி துடுப்பாடுகையில் அதிக கூடிய ஓட்டங்கள் பெற்றவரான டோனியின் சாதனை ஒன்றை தகர்த்துள்ளார்.

2005 ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணித்தலைவர் டோனி ஆட்டம் இழக்காது 145 பந்துகளில் 183 ஓட்டங்களை பெற்றார்.

அதேபோன்று கோஹ்லி பாகிஸ்தானுக்கு எதிராக 148 பந்துகளில் 183 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.
இதுவே இந்திய மண்ணில் வெற்றியை நோக்கி துடுப்பாடுகையில் வீரர்களது உயர்ந்தபட்ச ஓட்ட எண்ணிக்கியாகும்.

அதனை இன்று சவ்ராஸ்ட்ரா அணிக்கெதிரான போட்டியில் இளம் வீரர் ப்ரித்வி ஷா தகர்த்துள்ளார். இன்றைய போட்டியில் 123 பந்துகளில் ஆட்டம் இழக்காது 185 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆரம்ப வீரராக களமிறங்கிய ப்ரித்வி ஷா மோசமாக செயல்பட்டு விமர்சனத்தை சந்தித்திருந்தார் என்பதும் முக்கியமானது.

மும்பை அணிக்காக விளையாடிவரும் ப்ரித்வி ஷா உள்ளூரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 3 சதம் அடங்கலாக
185* ,2, 36 ,227* ,34 ,105* ஓட்ட மழை பொழிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.