டோனி, கோஹ்லி சாதனையை தகர்த்த ரோஹித்…!

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

IPL போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர் எனும் சாதனை இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா வசமானது.

இதன் மூலமாக டோனி மற்றும் கோஹ்லி ஆகியோரின் சாதனையை ரோஹித் முறியடித்துள்ளார்.
டோனி, கோஹ்லி ஆகியோர் முறையே 216 , 201 சிக்ஸர்களை பெற்றுள்ள நிலையில் ரோஹித் சர்மா இன்று 217 வது சிக்ஸரை விளாசினார்.

அத்தோடு கோஹ்லி, டோனி ஆகியோரை அடுத்து அணித்தலைவராக 4000 IPL ஓட்டங்களை ரோஹித் சர்மா பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.