டோனி சாதனையை தகர்த்த பாண்ட்…!

 

 

 

டோனி சாதனையை தகர்த்த பாண்ட்…!

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பேசுபொருளாக காணப்படும் இளம் வீரர் ரிஷாத் பாண்ட் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளுக்கான தரநிலையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.

அவரது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளமை சிறப்பமசமாக பார்க்கப்படுகின்றது.

கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், லாபிசேனே, ஜோ ரூட், கோஹ்லி, பாபர் அசாம், பாண்ட், ஹென்றி நிக்கோல்ஸ், ரோஹித் சர்மா, டேவிட் வோர்னர் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.

புஜாரா 13 , ரஹானே 14 வது இடத்திலும் தரநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முன்னர் விக்கெட் காப்பாளராக இருந்த டோனி டெஸ்ட் போட்டிகளில் பெற்ற அதிசிறந்த தரநிலை 19 ஆக இருக்கும் நிலையில், வெகுவிரைவாகவே பான்ட் டோனியின் சாதனையை முந்தியுள்ளார்.