தசுன் சானக்கவின் அதிரடியும் அற்புத வழிநடத்தலில்  SLC Greys அணி சாம்பியனானது..!

தசுன் சானக்கவின் அதிரடியும் அற்புத வழிநடத்தலில்  SLC Greys அணி சாம்பியனானது..!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் ஏற்பாடு செய்திருந்த 4 அணிகளுக்கிடையிலான எஸ்எஸ்எல்சி டி20 லீக் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

T20 உலகக்கிண்ணத் தொடருக்குரிய முன்னாயத்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் என்று சந்திமால் தலைமையிலான SLC Reds அணியும் தசுன் சானக தலைமையிலான SLC Greys அணியும் விளையாடின.

முதலில் துடுப்பெடுத்தாடிய SLC Greys அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

இதிலேயே விக்கெட் காப்பாளர் மினோத் பானுக 74 ஓட்டங்களையும்,  அதேபோன்று இளம் வீரர் நுவிந்து பெர்னான்டோ 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள தசுன் சானக 17 பந்துகளில் 48 ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

சந்திமால் தலைமையிலான SLC Reds அணியினரே 159 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினர்.