தசுன் சானக்கவை நாம் ஏன் கொண்டாட வேண்டும் தெரியுமா ? காரணத்தை படியுங்கள் வியந்துபோவீர்கள் ..!

தசுன் சானக்கவை நாம் ஏன் கொண்டாட வேண்டும் தெரியுமா ? காரணத்தை படியுங்கள் வியந்துபோவீர்கள் ..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது.

ஒருநாள் தொடரை இந்தியாவும், டுவென்டி-20 தொடரில் இலங்கையும் கிண்ணம் வென்றுள்ளன.

இப்போதைய நிலையில் இலங்கையின் புதிய தலைவராக இருக்கும் தசுன் சானக்க அதிகமாக புகழப்படுகிறார், ஆனால் ஒரு சிலர் பலம் குன்றிய இந்திய அணியையே அவர் வெற்றி கொண்டிருக்கிறார் எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை தோற்கடித்த பெருமை சானக்கவிற்கே கிடைத்திருக்கிறது.

இறுதியாக 2008ஆம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணியைை டெஸ்ட் தொடரொன்றில் 2-1 என வெற்றி கொண்டது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கடந்த 13 ஆண்டுகளில் மொத்தமாக 21 தொடர்கள் நிறைவுக்கு வந்தன, டெஸ்ட், ஒருநாள் T20 என்று 21 தொடர்கள் நிறைவுக்கு வந்தன.

21 தொடர்களில் 20 தொடர்களை இந்திய அணி கைப்பற்றியது,  2010ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் நிறைவுக்கு வந்தது. ஆக மொத்தத்தில் கடந்த 13 ஆண்டுகளில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற தொடர்களில் எதனையும் இலங்கை அணியால் வெற்றிகொள்ள முடியாது போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது 21 தொடர்களிக்கு பின்னர் தசுன் இலங்கைக்கு ஒரு தொடரை வென்று கொடுத்து வரலாற்றில் தன் பெயரை எழுதியள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே இலங்கை ரசிகர்கள் சானகவை கொண்டாடுவதில் தவறில்லை எனலாம்.