தடுமாறும் இந்தியா -மீண்டும் சொதப்பிய கோலி..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றத்தை சந்தித்துள்ளது .
41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது .
விராட் கோலி மீண்டும் ஒரு தடவை ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார், சென்னை டெஸ்டில் முதலாவது போட்டியில் மொயின் அலியினுடைய பந்துவீச்சில் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்த கோலி இந்த தொடரில் மீண்டும் ஒரு தடவை இன்று பென் ஸ்டோக்ஸ் இன் பந்துவீச்சில் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தார்.
விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்வில் ஒரே தொடரில் இரண்டு தடவை ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் .
ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் வைத்து 2014ஆம் ஆண்டு தொடரிலும் ,இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து உடனான தொடரிலும் கோலி ஒரே டெஸ்ட் தொடரில் இரண்டு தடவைகள் டக்கவுட் முறை மூலமாக ஆட்டம் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.