தடைப்படும் குசல் மெண்டிஸ் திருமணம் .

இலங்கை கிரிக்கெட் அணியின் 26 வயதான இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸின் திருமணம் தடைப்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

அவரது நண்பரான சதீர சமரவிக்ரமவின் திருமண நிகழ்வில் குசல் மெண்டிஸ் கடந்த 2 ம் திகதி பங்கேற்றிருந்தார், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட திரிமான்னவுக்கு நேற்று கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குசல் மெண்டிஸ் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் வருகின்ற 12 ம் திகதி திருமண பந்தத்தில் இணையவிருந்த குசல் மெண்டிஸின் திருமணம் நிகழ்வதில்
சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

கடந்த 2 ம் திகதி குசல் மெண்டிஸ் 26 வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 ஓட்டமற்ற பெறுதிகள் பெற்று விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள மெண்டிஸ், திருமணத்துக்கு பின்னாவது மீண்டு வரட்டும்.