தனக்கான ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்றிய கோலி..!

அரியாசனத்துக்குத் தகுதியானவராக அரசரை அடையாளம் காட்டுவது எதிரிகளை அசுர வதம் செய்யும் பொழுதுகள் தான்.

அதுவும் நிராயுதபாணியாக தடுமாறி விழுந்தவர் மீண்டு வந்தால்?!

அதுவும் தனது துருப்பிடித்த வாளுக்கு, போரிடும் போதே எதிராளியின் வாளோடு மோத வைத்து சாணை பிடித்துக் கொண்டால்?!

தனக்கான ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்றினால்?!

காலங்கள் மாறலாம், ஆனால் மன்னர்களுக்கான இந்த லூப் மாறாது. எழுவதும் விழுவதும் மறுபடி மீள்வதும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். கோலியின் விஷயத்திலும் இதேதான் நிலை. பல ஆண்டுகளாக ஃபார்மில் இல்லை என சொல்லப்படும் அதே கோலிதான் அதிவேகமாக 14000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் கடந்த இந்தியராகவும் மிளிர்கிறார்.

For Every Mudichu Vitanga Ponga Moments Of Kohli, There are Equivalent Number Of Irunga Bhai Moments Too!

உனக்கு நீயே எதரி என்போமே கோலி விஷயத்திலும் அதேதான் பிரச்சினை. அவர் எட்டிய அதே உயரம், அவர் கடந்த அதே மைல்கற்கள், அவர் தனக்காக செட் செய்த அந்த தரவுகோல் எல்லாமே சேர்ந்துதான் அவருக்கு எதிராக நிற்கின்றன. அவர் எத்தனை முறை மீண்டு வந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்தாலும் ஒப்பீடாக அவை முன்னே வந்து “அந்தக் கோலி மாதிரி இவர் இல்லையே!” என சொல்ல வைக்கின்றன.

ஆம்! ஒரு சதம், அதுவும் இத்தகைய பெரிய மேடையில் அதுவும் பங்காளி பாகிஸ்தானோடு என்பது வரை சந்தோஷம் தான். ஆனால் பழைய பாட்ஷாவாக ராஜாதி ராஜாவாக அவர் பார்க்கப்பட வேண்டுமெனில் இன்னமும் பல பெரிய இன்னிங்க்ஸுகள் தேவை. நடப்புத் தொடரிலேயே அது நிகழ வேண்டுமென்பதே அனைவரது விருப்பமும்…..

#அய்யப்பன்

Previous article5 முறை பிளேயர் ஆப் தி மேட்ச் விருது வாங்கிய விராட் கோலி 🔥
Next articleஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை வந்தார் தோனி..டிசர்ட் டிசைனில் மறைந்திருக்கும் செய்தி என்ன?