தனித்துவ சாதனையைப் படைத்த பும்ரா-  இதுவெல்லாம் சாதாரண சாதனை கிடையாது ..!

தனித்துவ சாதனையைப் படைத்த பும்ரா-  இதுவெல்லாம் சாதாரண சாதனை கிடையாது ..!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் தான், இந்திய அணியால் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடிந்தது. அதுவும் தென் ஆப்பிரிக்க அணியின் கோட்டையான செஞ்சூரியனில் அந்த அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைத்தது இந்திய அணி.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ஷமி அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா 2 இன்னிங்ஸ்களிலும் தலா 2 விக்கெட்டுகள் என மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த 4 விக்கெட்டுகளுடன் சேர்த்து மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. இந்த 105ல் 101 விக்கெட்டுகளை பும்ரா வெளிநாடுகளில் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒரு தனித்துவமான சாதனையை படைத்துள்ளார் பும்ரா.

அதாவது குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெளிநாடுகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர் 118 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தபோது வெளிநாட்டில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டியிருந்தார். அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

#Abdh