தனிமைப்படுத்தப்பட்ட CSK யின் முக்கிய வீர்ர்கள்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இந்திய வீரர்கள், கேப்டன் MS தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

இது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படுவதற்கான ஆயத்தமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளுக்காக சிஎஸ்கே குழு ஆகஸ்ட் 13-14 தேதிகளில் துபாய் செல்ல திட்டமிட்டுள்ளது.

உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, ஐக்கிய அரபு அமீரகம்-துபாய் அல்லது அபுதாபிக்கு பறக்கும் முன் இந்தியாவில் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை ஆனாலும் CSK நிர்வாகம் கடந்தகால அனுபவங்களை கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது , அதன் ஓர் அங்கமாகவே இந்த தனிமைப்படுத்தலும் அமைந்துள்ளது.

“இது ஒரு முன் நிபந்தனை இல்லை என்றாலும், நாங்கள் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தோனி உள்ளிட்ட 12 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவலை CSK யின் தலைமை நிர்வாக (CEO) அதிகாரி காசி விஸ்வநாதனும்  தெரிவித்தார்.

அத்தோடு சிஎஸ்கே வின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் தோனி தனிமைப்படுத்தலில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Dhoni CSK

தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள் ஒவ்வொரு நாளும் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் சிஎஸ்கே அதிகாரி கூறியுள்ளார்.

 13 இந்திய வீரர்கள் சென்னை ஹோட்டலில் இருக்கிறார்கள், அவர்களே துபாய்க்கு செல்லும் முதல் தொகுதி வீர்ர்களாவர், அத்தோடு தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) மற்றும் சமீபத்தில் இலங்கையில் பங்கேற்ற வீரர்கள் அடங்கிய இரண்டாவது தொகுதி பின்னர் UAE செல்லவுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் மற்றும் சர்வதேச தொடரில் விளையாடுபவர்கள் பின்னர் Bubble to Bubble பரிமாற்ற வசதி மூலம் அணியில் சேருவார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அனைத்து ஃபிரான்சைஸ் குழு உறுப்பினர்களும் குமிழிக்குள் நுழைவதற்கு முன் ஆறு நாட்கள் தங்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் விதிமுறை காணப்படுகிறது.

UAE சென்றடைந்தும் குழு பயிற்சி நடவடிக்கைகளையும் தொடங்குவதற்கு முன், அனைத்து குழு உறுப்பினர்களும் 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சோதிக்கப்பட வேண்டும் என்று நெறிமுறைகள் கூறுகின்றன.

இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.