தனியான விமானத்தை கேட்கும் IPL வீரர்- அதிகரிக்கும் IPL நெருக்கடி..!

இந்தியாவில் இடம்பெற்றுவரும் ஐபிஎல் தொடர் முடியும்வரை இந்தியாவில்தான் இருப்போம், தொடர் முடிந்தபின் ஆஸ்திரேலிய வீரர்கள் தாயகம் திரும்பத் தனியாக விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு அந்நாட்டு வீரர் கிறிஸ் லின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஆரம்ப வீரரான லின் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து, 2 வது அலை தீவிரமாகியிருப்பதை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் இடைநடுவே தமது தாயகமே திரும்பி வருகின்றனர்.

கோழி தலைமையிலான ரிசப அணிக்க்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்ப்பா, கேன் ரிச்சர்ட்சன்,பஞ்சாப் வீரர் ஆண்ட்ரூ டை ஆகியோர் ஆஸ்திரேலிய புறப்பட தயாராகினர்.

ஆயினும் விமானபோக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் அவர்கள் மும்பை ஹொட்டேல்களிலே இப்போதுவரை தங்கியிருப்பதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையிலேயே கிறிஸ் லின் தனியான விமானத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடம் கேட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

IPL போட்டிகளில் பங்கேற்றுக்கும் வீரர்களுக்கான ஊதியத்திலிருந்து கிரிக்கெட் அவுஸ்திரேலியா 10 வீதமான பணத்தைப் பெற்றுக்கொள்கின்றது.

ஆகவே இப்படியான நெருக்கடியான நிலைமையில் தனியான விமானத்தை கொடுத்து உதவுவதே சிறந்தது என லின் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 30 ம் திகதிவரை நடைபெறவிருக்கும் IPL போட்டிகளுக்கு இதன்காரணத்தால் பெருத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.