தப்பியது ஹேரத் சாதனை, மேற்கிந்திய தீவுகளை சுருட்டி எடுத்தது இங்கிலாந்து…..!

T20 உலக கோப்பையின் நேற்றைய முதல் நாளில் இங்கிலாந்து அணி ,நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸை துபாயில் நேற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் 2.2 ஓவர்கள் வீசி 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது 2014 ல் ரங்கன ஹேரத்தின் மிகச்சிறந்த உலக்கோப்பை சாதனையை ரஷித் நினைவுபடுத்தினார், அவர் நியூசிலாந்திற்கு எதிராக 3.3 ஓவர்கள் பந்துவீசி 3 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் என்ற T20 உலக்கோப்பை சாதனையை பெற்றார்.

 

சுவாரஸ்யமாக, நேற்றைய போட்டியில் ரஷீத், ஹேராத்தின் பொருளாதார(Economy) விகிதமான 0.85 என்பதனை சமன் செய்தார், இது ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளுக்கு மேல் ஒரு பந்துவீச்சாளரின் குறைந்த பொருளாதார (Economy) விகிதம் ஆகும்.

இதற்கிடையில், மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய போட்டியில்  55 ரன்கள் மட்டுமே எடுத்தது,

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்ட சாதனையை நெதர்லாந்து தன்வசம் வைத்திருக்கிறது.

இலங்கை அணிக்கு எதிராக நெதர்லாந்து 39 மற்றும் 44 ஓட்டங்களை பெற்றமையே உலக கோப்பை வரலாற்றில் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.

இதனை அடுத்து நடப்பு உலக சம்பியனான மேற்கிந்திய தீவுகள் நேற்றைய போட்டியில் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது , அதன் மூலமாக உலக கோப்பை வரலாற்றில் மூன்றாவது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை எனும் மோசமான சாதனையை படைத்தது..

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 6 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.