தமிம் இக்பால் எடுத்த முடிவை பாராட்டி மகிழும் உலக கிரிக்கெட் ரசிகர்கள்- அந்த மனசு தான் சார் கடவுள் ..!
பங்களாதேஷ் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் தமிம் இஃக்பால் T20 உலகக்கிண்ண போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
உலக கிண்ண போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஊக்குவிக்க நினைத்ததாலே இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழ் இஃக்பால் தகவல் வெளியிட்டுள்ளார்.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி T20 உலக கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையிலேயே பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரரான இக்பால் இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் உலக கிண்ணத்தின் ஆரம்ப சுற்றுத் தொடரில் விளையாடியே அடுத்த சுற்றுக்குத் (Super12) தகுதிபெறவேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.