தமிழக அணி அதிரடி- மீண்டும் அரைஇறுதியில்..!

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரோ கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணியும், கர்நாடக அணியும் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரர் பாபா அப்ரஜித் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாவது வீரராக சாய் கிஷோர் களமிறங்கி, கர்நாடக பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.4 பவுண்டரி 3 சிக்சர் விளாசிய சாய் கிஷோர்61 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய ஜெகதீசன் 102 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு 44 ரன்களும், இந்திரஜித் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.கேப்டன் விஜய் சங்கரும் 3 ரன்களில் வெளியேற தமிழக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது.

41வது ஓவரில் களத்திற்கு வந்த ஷாரூக்கான் முதலில் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். 44 வது ஓவர் முடிவில் ஷாரூக்கான் 14 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பின்னர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஷாரூக்கான் ஆட தொடங்கினார். எப்படி பந்துவீசினாலும் பவுண்டரி, சிக்சர் என பறந்தது.

இறுதியில் ஷாரூக்கான் 39 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். சூறாவளி போல் சுழன்ற ஷாரூக்கான் ஆட்டத்தால் தமிழக அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.

பதிலுக்கு ஆடிய கரநாடக அணி இந்தப் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது.

ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ஷாரூக்கானுக்கு கோடிகள் கொட்டப்போவது உறுதி என்பது மட்டும் தெளிவாகி உள்ளது.