தமிழக கிரிக்கெட் வீரருக்கு அடித்த அதிஷ்டம்…!
தமிழக கிரிக்கெட் வீரர் ஷாருக் கானை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி, இம்முறை சாயிட் முஷ்டாக் அலி தொடரில் கிண்ணம் வென்ற தமிழக அணியில் முக்கிய வீரராக ஷாருக் கான் விளையாடியிருந்தார்.
IPL க்கு வரும் முதல் சந்தர்ப்பத்திலேயே ஷாருக் கான் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் போயுள்ளார்.
25 வயதான இவர், சாயிட் முஷ்டாக் அலி தொடரில் காலிறுதி ஆட்டத்தில் 19 பந்துகளில் ஆட்டம் இழக்காது 40 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிபெற வைத்தவராவார்.