தமிழக வீரரின் பந்தில் ஐபிஎல் தொடரின் மிகப் பெரிய சிக்ஸ் அடித்த தினேஷ் கார்த்திக்.. கொண்டாடிய ரசிகர்கள்

தமிழக வீரரின் பந்தில் ஐபிஎல் தொடரின் மிகப் பெரிய சிக்ஸ் அடித்த தினேஷ் கார்த்திக்.. கொண்டாடிய ரசிகர்கள்

2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் சீசனின் மிகப் நீளமான சிக்ஸரை அடித்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய இந்தப் போட்டி டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கிளாசன் 106 மீட்டர் சிக்ஸ் அடித்தார். அதுவே 2024 ஐபிஎல் தொடரின் மிகப் நீளமான சிக்ஸராக இருந்தது.

அடுத்த சில மணி நேரங்களில் தினேஷ் கார்த்திக் அந்த சாதனையை முறியடித்தார். சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் பந்தில் தினேஷ் கார்த்திக் 108 மீட்டருக்கு பெரிய சிக்ஸ் அடித்தார். அந்த பந்து மைதானத்தின் கூரையை தொட்டு விட்டு மீண்டும் மைதானத்துக்குள் வந்து விழுந்தது.

இதை அடுத்து ஒரே போட்டியில் மிக நீளமான சிக்ஸர் சாதனையை முறியடித்தார் தினேஷ் கார்த்திக். அவர் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். 5 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து இருந்தார். இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்கள் அடித்து இருந்தன.

மேலும், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்தது. இதுவே ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய ஸ்கோர் ஆகும். அந்த அணியில் ட்ராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்தார். அடுத்து ஆடிய பெங்களூரு அணி 262 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.