தமிழக வீரர் ஷாருக்கானின் இறுதிநேர அதிரடியில் வெற்றியை தனதாக்கியது பஞ்சாப் கிங்ஸ் …!
14 வது ஐபிஎல் தொடரில் இன்று இடம்பெற்ற 45 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இன்றும் மிகச்சிறப்பாக அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 65 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சம். 166 எனும் இலக்குடன் ஆடிய பஞ்சாப் கிங்சுக்கு வழமைபோன்று மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் மிகச் சிறந்த ஆரம்ப இணைப்பாட்டம் புரிந்தனர்.
இறுதியில் போட்டி பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தருணத்தில், ஆடுகளும் புகுந்த தமிழக வீரர் ஷாருக் கான் அதிரடியாக விளையாடி பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் 9 பந்துகளில் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார் . நடிகர் ஷாருக்கான் உரிமையாளராக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தோல்விக்கு இன்னுமொரு ஷாருக் கானே காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய பஞ்சாப் அணியின் வெற்றி மூலமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது அணியாக Play off சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
67 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அணித்தலைவர் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வானார்.