தமிழ்பேசும் கிரிக்கெட் ரசிகர்களின் ஏக்கம் போக்க காத்திருக்கும் சாருஜன்- இலங்கை கிரிக்கெட் களத்தை கலக்கும் குட்டி சங்கா…!

தமிழ்பேசும் கிரிக்கெட் ரசிகர்களின் ஏக்கம் போக்க காத்திருக்கும் சாருஜன்- இலங்கை கிரிக்கெட் களத்தை கலக்கும் குட்டி சங்கா…!

இலங்கை கிரிக்கெட் களத்தில் தமிழ்பேசும் வீரர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட மாட்டாதா என காத்திருக்கும் ஏராளமான ரசிகர்களின் ஏக்கத்தை போக்கவல்ல ஓர் இளம் வீரர் உருவாகிவருகிறார்.

குட்டி சங்கா என ரசிகர்களால் நன்கறியப்பட்ட சாருஜன் சண்முகநாதன்.

சங்ககாராவின் சாயலில் கவர் ட்ரைவ் அடித்து 4 வயதிலேயே தொலைக்காட்ச்சிகள் வழியாக கிரிக்கெட் ரசிகர்களது பார்வையில் பட்ட இந்த குட்டி சங்காவுக்கு 16 வயதாகிறது.

கொழும்பின் பிரபலமான பெனெடிக் கல்லூரியின் 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராக விளங்கும் சாருஜன், பாடசாலை கிரிக்கெட் சங்கம் நடத்தும் 15 வயதுக்குடப்பட்ட டிவிஷன் 1 போட்டிகளில் ஓட்டங்களை வாரி விளாசிக் கொண்டிருக்கின்றார்.

பெனடிக் கல்லூரி விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் அந்த அணிக்கு 3 வெற்றிகளையும் தேடித் கொடுத்துள்ளார். அத்தோடு அகில இலங்கை ரீதியில் சாருஜன் 6 வது இடத்தை பெற்றார்.

5 போட்டிகளில் 4 அரைச்சதங்கள் அடங்கலாக 101 எனும் அதி உச்ச சராசரியில் 304 ஓட்டங்களை சாருஜன் விளாசித்தள்ளியமை கவனிக்கத்தக்கது. அதேநேரம் பந்துவீச்சில் 5 விக்கெட்டுக்களை சாருஜன் சாய்த்துள்ளார்.

இதிலே சிறப்பம்சம் என்னவென்றால் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு பல வீரர்களை உருவாக்கிய ரோயல் கல்லூரி, மஹாநாம கல்லூரி ஆகிய அணிகளுக்கெதிராக சாருஜன் அரைசதங்களை விளாசியுள்ளார்.

ஸ்கோர் விபரங்கள்.

முதல் போட்டி
பெனடிக் கல்லூரி -145 /6 -எதிர் மஹாநாம கல்லூரி
சாருஜன் 60*

2 வது போட்டி
பெனடிக் கல்லூரி 199/10 எதிர் ரோயல் கல்லூரி
சாருஜன் 93

3 வது போட்டி
பெனடிக் கல்லூரி 179/10 எதிர் பாணந்துறை ரோயல் கல்லூரி
சாருஜன் 72

4 வது போட்டி
பெனடிக் கல்லூரி 123/4 எதிர் (CMS )
சாருஜன் 54*

5 வது போட்டி
பெனடிக் கல்லூரி 298
சாருஜன் 25

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்புரியும் பிரபல புகைப்பட கலைஞரான நாதன் சண்முகநாதனின் மகனே சாருஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெனடிக் கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரி அணிகளுக்கிடையில் இறுதியாக இடம்பெற்ற மாபெரும் கிரிக்கட் சமரில் (Big Match) மிகச் சிறந்த Fielder களத்தடுப்பு வீரருக்கான விருதையும் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்ட அணியின் தலைவராக வழி நடத்தி உள்ள சாருஜன், 19 வயதுக்குட்பட்ட இலங்கையின் முதல் தெரிவு அணியிலும் இடம் பிடித்துள்ளதுடன், மாகாண அணியிலும் இடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் 2 ஆண்டுகளில் இடம்பெறவுள்ள அடுத்த இளையோர் உலக கிண்ண போட்டிகளில் இலங்கை அணியில் சாருஜனும் இடம்பிடிக்க இறைவனை பிரார்த்திப்போமாக.