தமிழ் யூனியன் அணி மேஜர் கிளப் வளர்ந்து வரும் (Major club-Emerging Tournament) 3-நாள் போட்டியில் சாம்பியனானது..!

தமிழ் யூனியன் அணி மேஜர் கிளப் வளர்ந்து வரும் (Major club-Emerging Tournament) 3-நாள் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ?️

இலங்கை கிரிக்கட் ஏற்பாடு செய்து நடத்திய வளர்ந்து வரும் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ் யூனியன் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

மூன்று நாட்கள் கொண்டதாக இந்த போட்டி தொடர் வெற்றிகரமாக ஒழுங்கமைக்கப்பட்டு இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

Score விபரம் ?

தமிழ் யூனியன் 254 & 123 v Sebastianites CAC 167 & 166. – தமிழ் யூனியன் 44 ஓட்டங்களால் தொடரில் வெற்றி பெற்றது. ?

மேஜர் வளர்ந்து வரும் கிளப் அணிகளது போட்டி 2022

விருதுகள்

சாம்பியன்கள்: தமிழ் யூனியன்

ரன்னர் அப்: செபாஸ்டியானைட்ஸ்

போட்டியின் சிறந்த வீரர்: – மோவின் சுபசிங்க – விமானப்படை SC – 382 ஓட்டங்கள் & 35 விக்கெட்டுகள்

சிறந்த பேட்ஸ்மேன்: – அவிஷ்க பெரேரா – கோல்ட்ஸ் சிசி – 663 ரன்கள், இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு 50கள் – சராசரி 82.87

சிறந்த பந்து வீச்சாளர்: கௌமல் நாணயக்கார – இராணுவ எஸ்சி – 50 விக்கெட்டுகள் – சராசரி : 12.22

Previous articleஇலங்கையின் தேசிய தடகள சாம்பியன் திடீர்மரணம்…!
Next articleT20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனைக்கு சொந்தக்காரரான கேஎல் ராகுல்…!