தம்பி வெளியே- அண்ணன் உள்ளே, உலக கிண்ண இங்கிலாந்து அணியில் மாற்றம்..!

தம்பி வெளியே- அண்ணன் உள்ளே, உலக கிண்ண இங்கிலாந்து அணியில் மாற்றம்..!

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் அடுத்த டி 20 உலகக் கோப்பையில் இருந்து விலகினார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் பின்னர் வலியை பரிசோதிக்கவும் மற்றும் காயத்தின் அளவை அறிய ஸ்கேன் செய்தார்.

இந்த செய்தியை உறுதிப்படுத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கர்ரன் வீடு திரும்புவார் என்பதுடன் தொடர்ச்சியாக ECB யின் மருத்துவ குழுவினால் கண்காணிக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் (சாம் கர்ரன்) அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் இங்கிலாந்துக்கு பறப்பார், மேலும் இந்த வார இறுதியில் ECB யின் மருத்துவ குழுவிடம் இருந்து மேலும் ஸ்கேன் மற்றும் முழு மதிப்பாய்வையும் பெறுவார் என்று ECB அறிக்கை கூறுகிறது.

ஐபிஎல்லின் இரண்டாம் கட்டத்தில் சாம் கர்ரான் அவ்வளவு சிறப்பாக ஜொலிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில், சாம் கர்ரனின் சகோதரர் டாம் கர்ரன் டி 20 உலகக் கோப்பைக்கு மாற்றாகப் பெயரிடப்பட்டுள்ளார். டாம் கர்ரான் ஏற்கனவே மேலதிக வீரராக அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

மேலும், வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி மேலதிக வீரர்களுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சூப்பர் 12 க்கு முன், இங்கிலாந்து இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களை விளையாடும். இங்கிலாந்து அணி பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் குரூப் A -யில் இடம் பெற்றுள்ளனர் மற்றும் அக்டோபர் 23 -ம் தேதி துபாயில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி 20 உலகக் கோப்பைப் போட்டியைத் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.