தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்தியா ,மேற்கிந்திய தீவுகள் உடனான தொடரை வைட்வோஷ் செய்து சாதனை…!
இந்தியாவிற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.
முன்னதாக இடம்பெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்றிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று நிறைவுக்கு வந்த டுவென்டி தொடரிலும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது.
ரோகித் சர்மா முழுநேர தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பங்கேற்ற இரு வகையான தொடர்களிலும் தன்னுடைய மதிநுட்பமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு அத்தனை போட்டிகளிலும் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார் .
போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சூரியகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் அதிரடியில் இந்திய அணி 185 ஓட்டங்களை குவித்தது, 186 எனும் இலக்குடன் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் போராடி தோற்றனர். ரோகித் சர்மாவின் தலைமைத்துவம் இது மாத்திரமல்லாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் இறுதி நேரத்தில் சிக்கனமாக பந்துவீச இந்தியா 17 ஓட்டங்களால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியதோடு T20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தனதாக்கியது.
அடுத்து இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் வரும் 24ஆம் திகதி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகிறது.