தரவரிசையில் முன்னேறியுள்ள இலங்கை வீரர்கள்…!

பங்களாதேஷ் அணியுடனான போட்டிகளுக்கு பின்னர் வெளியாகியிருக்கும் புதிய ஒருநாள் போட்டி தரவரிசையில் இலங்கை வீரர்கள் பலர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

பந்துவீச்சில் கலக்கிய துஷ்மந்த சமீர 27 இடங்கள் முன்னேறி 33 வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை அணியின் தலைவரான குஷால் பெரேரா, பங்களாதேஷ் மண்ணில் தனது 6 வது சதத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

13 இடங்கள் முன்னேறி 42 வது இடத்தைப் பிடித்துள்ளார், ஒருநாள் போட்டிகளில் 41 வது இடத்தில் இருந்தமை இவரது சிறந்த பெறுதியாக காணப்படுகின்றது.

தனஞ்சய டீ சில்வா 10 இடங்கள் முன்னேறி 85 வது இடத்தைப் பிடித்துள்ளார், அத்தோடு சகலதுறை வீரர்கள் வரிசையில் 24 இடத்தைப் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

துடுப்பாட்டத்தில் பாபர் அசாம், கோஹ்லி, ரோஹித் சர்மா ஆகியோரும், பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், மஹதி ஹசன் மிராஸ், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.