தற்போதைய டெஸ்ட் அணிகளின் தலைவர்களுள் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்ட தலைவர்- கோலி அசைக்க முடியாத முதலிடத்தில் ..!

தற்போதைய டெஸ்ட் அணிகளின் தலைவர்களுள் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்ட தலைவர்- கோலி அசைக்க முடியாத முதலிடத்தில் ..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்டில் இந்திய அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 க்கு 1 எனும் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த வெற்றி கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கிடைத்த 38வது டெஸ்ட் வெற்றியாக பார்க்கப்படுகிறது, தற்காலத்தில் சர்வதேச அணிகளை வழி நடத்தும் ஏனைய தலைவர்களுடன் ஒப்பிடுகிறபோது அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்ட தலைவர்கள் வரிசையில் கோலி அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கிறார்.

இதுவரைக்கும் கோலி தலைமையில் இந்திய அணி 38 வெற்றிகளை பெற்றிருக்கிறது, அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் 27 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இலங்கை அணி தலைவர் திமுத் கருணாரத்ன 5 வெற்றிகளையும் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் 5 டெஸ்ட் போட்டிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இப்போதுள்ள டெஸ்ட் அணித் தலைவர்கள் பெற்றுக் கொண்ட டெஸ்ட் வெற்றிகளின் விபரம் வருமாறு ???

கோலி -38 (ஓவல் வெற்றியுடன் சேர்த்து)

ரூட்- 27 வெற்றிகள்

வில்லியம்சன்- 22 வெற்றிகள்

ரிம் பெயின்- 11 வெற்றிகள்

பாபர் அசாம் , கருணாரத்ன -5 வெற்றிகள்