தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட இலங்கை வீரர்கள்..!

தசுன் ஷனக மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின்  வீரர்கள் இன்று கண்டியில் ஆரம்பமாகவுள்ள போட்டிக்கான ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்காக கண்டி தலதா மாளிகை சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக்கு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் போட்டிக்கான ஆசிர்வாதத்தைப் பெறுவதற்காக தற்போது கண்டியில் உள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நேற்று பிற்பகல் கண்டி தலதா மாளிகை சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் கீழே ?