தலைமைத்துவத்தில் மிரட்டிய ரோஹித் – புதுவித இந்திய அணியை காண்பது உறுதி..!

ரோகித் கேப்டன்சி

* புதுப்பந்தில் சர்துலை வைத்து ஸ்விங் தேடியது.

* Dew பிரச்சினைக்காக ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹலை முன்னே கொண்டுவந்தது.

* பிரசித்தின் பிரமாதமான முதல் ஸ்பெல்லை லோ-ஸ்கோரின் காரணமாக நாலு ஓவர்களோடு நிறுத்திப் பதுங்கி, சர்துலை மீண்டும் கொண்டுவந்தது.

*சாஹல் கொஞ்சம் வேகமாய் flaters வீசி ஷாய்கோப்பை முடிக்க, தாமதிக்காமல் மீண்டும் பிரசித்தை கொண்டுவந்து பூரனைத் தூக்கியது. அதற்காக பர்ஸ்ட் ஸ்லிப்பிலிருந்து சற்றுத் தள்ளி நின்றது..

*பூரன் வெளியேபோக ஒரே ஓவரில் சுந்தர்-பிரசித்தை நிறுத்தி, இரண்டு ரைட்-ஹேன்ட் பேட்ஸ்மேன்களுக்காக உடனே சாஹலை கொண்டுவந்து ஆல்அவுட்டிற்கு போனது.

*அதே சாஹல் ஸ்பெல்லில் எதிர்முனையில் சர்துலை கொண்டு வந்து டீப்-ஸ்கொயர்லெக், டீப்-லெக் வைத்து ஆப்-ஸ்டம்ப் லைனுக்கு சற்று வெளியே சர்ப்ரைஸ் பவுன்சர் அடித்து ஹோல்டரை தூக்கியது.

*ஹோல்டர் வெளிய போய் லெப்ட்ஹேன்ட்டர் ஹூசைன் வர உடனே ஆப்ஸ்பின் சுந்தரை கொண்டுவந்ததோடு எதிர்முனையில் இரண்டாவது ஸ்பெல்லுக்கு சிராஜை சுந்தருக்குத் துணையாய் இறக்கிவிட்டது.

* சுந்தரிடமிருந்து ரன்கள் சுலபமாய் கசிய அடுத்த ஓவரிலயே ஆப்ஸ்பின் சிக்ஸ்த் பவுலர் ஹூடாவைக் கொண்டுவந்து செட்டில்டு பேட்ஸ்மேன் ப்ரூக்ஸை தூக்கியது.

* ஹூசைன்-பாபியன் பார்ட்னர்ஷிப் பில்டப் ஆக சாஹல்-சுந்தர் நாலு ஓவர்கள் இருந்தும் அட்டாக் பண்ண சிராஜ்-சர்துலை கொண்டு வந்து ஹூசைன்-பாபியன் இருவரையும் அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பியது.

* சுந்தரை 48 ஓவரில் பயன்படுத்தாமல் 45 ஓவரிலயே கொண்டுவந்ததோடு விக்கெட்டையும் எடுத்தது.

* இந்த ஆட்டத்தில் ஆறு பவுலர்களுக்கு ஸ்பெல் மாற்றியபோதும் விக்கெட் கிடைத்திருக்கிறது.

* இந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் ஸ்பெல் மட்டும் மூன்று.

* ஆன்-பீல்டிற்குள் வந்ததிலிருந்து தியரி போல் எதையும் பாலோ செய்யாமல் அந்தந்த சூழ்நிலைக்கு முடிவுகள் எடுத்ததில்லாமல், லோ-ஸ்கோர் காரணத்தால் சிராஜ்-பிரசித்-சாஹலை தேவைக்குப் பதுக்கிப் பயன்படுத்தியதெல்லாம் வேற லெவல். ரொம்ப நாள் கழிச்சி செமையான ஆன்-பீல்ட் கேப்டன்சி மேட்ச்!

Richards