தலைமைப் பதவியிலிருந்து விலகிய பானுக – காலி அணி தக்கவைத்துள்ள வீரர்கள்..!

ஜூலை 5 ஆம் தேதி LPL வரைவுக்கு முன்னதாக 9  வீரர்களைத் தொடர்ந்து ஒப்பந்தம் செய்துள்ளதாக காலி கிளாடியேட்டர்ஸ் அறிவித்துள்ளது .

தனுஷ்க குணதிலக்க

குசல் மெண்டிஸ்

துஷ்மநாத சமீரா

ஷஃப்ராஸ் அகமது

இமாத் வசீம்

ஃபஹீம் அஷ்ரப்

லக்ஷன் சண்டகன்

நுவன் துஷார

புலின தரங்க

இதேநேரம் காலி கிளாடியேட்டர்ஸ் அணித்தலைவர் பதவியில் இருந்து பானுக ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார்.

சமீர, தனுஷ்க, குசல் மெண்டிஸ் உட்பட பல முன்னணி வீரர்களை கிளாடியேட்டர்ஸ் தக்கவைத்துள்ளது,

அதன்படி, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக, லக்ஷான் சந்தகன், நுவன் துஷார, துஷ்மந்த சமிர மற்றும் புலின தரங்க ஆகிய 6 உள்ளூர் வீரர்கள் உள்ளனர்.

மூன்று வெளிநாட்டு வீரர்களும் பாகிஸ்தான் வீரர்கள் சர்ஃபராஸ் அகமது, இமாத் வாசிம் மற்றும் ஃபஹீம் அஷ்ரப்.

இதேவேளை, கடந்த இரண்டு எல்பிஎல் தொடர்களிலும் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை வழிநடத்திய அணித்தலைவர் பானுக ராஜபக்ச அணியிலிருந்து விலகியுள்ளார்.

புதிய தலைவராக குசல் மென்டிஸ் செயற்பட வாய்ப்புள்ளது.